ஹரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்

ஹரியானா மாநிலத்தில் பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக 71 இடங்களிலும், காங்கிரஸ் 11 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

மற்ற கட்சிகளுக்கு 8 இடங்கள் கிடைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

நியூஸ் எக்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக 75 முதல் 80 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 முதல் 12 இடங்களிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

மற்ற கட்சிகள் ஒன்று முதல் நான்கு தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

டிவி 9 நடத்திய கருத்து கணிப்பில் பாஜக 47 தொகுதிகளிலும் காங்கிரஸ் 23 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

மற்ற கட்சிகள் 20 தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே