டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20சதவீதம் தீபாவளி போனஸ்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

டாஸ்மாக் கடையில் நிரந்தர ஊழியர்கள் உட்பட ஐந்து வகையான ஊழியர்களுக்கும் போனஸ் அறிவித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி டாஸ்மாக் கடைகளில் உதவி விற்பனையாளராக பணியாற்றுபவர்களுக்கு 16 ஆயிரத்து 300 ரூபாய் போனஸாக வழங்கப்படும்.

அதேபோல் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு 16 ஆயிரத்து 800 ரூபாய் போனஸாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணத்தை 10 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே