தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி வருகிற 9-ந் தேதி முதல் தொடங்குகிறது.

இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தொடங்கி வைத்த நிலையில், வருகிற 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 4 நாட்கள் ரேஷன் கடைகள் மூலம் இதை வழங்கப்பட உள்ளது.

கூட்ட நெரிசலை தவிர்க்க, தெரு வாரியாக குறிப்பிட்ட நாட்களில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படஉள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்புடன் இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக வழங்கப்படும். 

மின்னணு ரேஷன் அட்டையை கொண்டு வந்தால் மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கும். 

ஆதார் அட்டையை வைத்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை வைத்தோ தான் பொங்கல் பரிசு தொகுப்பை பெற முடியும். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே