சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சி தொடங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
வரும் 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது உறுதி என அறிவித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இன்னமும் கட்சியின் பெயரை அறிவிக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமும், மற்றவர்களுக்கு ரஜினியின் தொடர்ச்சியான கால தாமதம் கிண்டலையும் உருவாகியிருக்கிறது.
இந்நிலையில், வரும் பொங்கலன்று மதுரையில் பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்தி கட்சியின் பெயரை ரஜினி அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினிகாந்தை பிரசாந்த் கிஷோர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
தேர்தல் வியூகம் அமைத்து தரும் பிரசாந்த் கிஷோர், பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை தெரிவித்து 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே கட்சி தொடங்குகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், இதுகுறித்த தகவல்கள் ரசிகர் மன்றங்களின் முக்கிய தலைவர்களுடன் பரிமாறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.