பிரதமர் மோடியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு

டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்தித்ததாகத் தெரிவித்தார்.

கல்வி, விவசாயம், வேலைவாய்ப்பு தொடர்பாக பிரதமரிடம் கருத்துகளை தெரிவித்ததாகவும், தாம் கூறியவற்றை அவர் பொறுமையுடன் கேட்டதாகவும் ஜி.கே.வாசன் குறிப்பிட்டார்.

பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணைய உள்ளதாக கூறப்படுவது வதந்தி என்றும் அவர் விளக்கினார்.

பிரதமர் மோடி உடனான சந்திப்பைத் தொடர்ந்து பாஜகவின் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை ஜி.கே.வாசன் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே