உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை 315 வாக்கு மையங்களில் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
அந்த மனுவில் எடப்பாடி, சங்ககிரி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் என மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
சற்று நேரத்திற்கு முன் மாநில தேர்தல் கமிஷனரை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இது குறித்து நீதிமன்றத்தை நாட உள்ளதாக அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என அக்கட்சியின் தலைமை எதிர்பார்த்த நிலையில் தற்போது திமுகவும் அதிமுகவும் மாறி மாறி சம அளவில் வெற்றி பெற்று வருவதாக முன்னிலை நிலவரங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
இதனை அடுத்து தேர்தல் முடிவுகளால் அதிருப்தி அடைந்த திமுக திடீரென தற்போது நீதிமன்றம் சென்றுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது