தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதன் மூலமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,596 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் இன்று மேலும் 33 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 27. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 662. இன்று உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
தமிழகத்தில் பாதிப்பு: 1,629
உயிரிழந்தோர் எண்ணிக்கை: 18
குணமடைந்தோர் எண்ணிக்கை: 662