மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம், சிறப்பூதியமாக வழங்கப்படும்

கரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்பூதியமாக வழங்கப்படும் என்று முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாராட்டுகளை தெரிவிக்கும் வகையில் அனைவரும் எழுந்து கரவொலி எழுப்பக் கேட்டுக்கொண்டார்.

அதன்படி முதல்வர் உள்ளிட்ட அனைவரும் கரவொலி எழுப்பி மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

அதன்பின்னர், கரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்பூதியமாக வழங்கப்படும் என்று முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.

தொடர்ந்து, தீவிரமாகப் பரவி வரும் கரோனா விஷயத்தில் மக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம்.

ஒவ்வொரு உயிரும் முக்கியம். அரசு கூறும் விதிமுறைகளைப் பின்பற்றி மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என தமிழக மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,

  • கரோனா வைரஸ் சமூகப் பரவல் நிலையில் உள்ளது. மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.
  • மக்களுக்குத் தேவையானதை அரசு செய்யத் தயாராக உள்ளது.
  • கரோனா வேகமாகப் பரவி வருகிறது.
  • அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே