10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 9.45 லட்சம் மாணவ, மாணவியரின் தேர்வு முடிவுகள் வெளியானது.

  • http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in இணையதளங்களில் முடிவுகளை பார்க்கலாம்.
  • மாணவர்கள் அளித்த செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவு, எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.

காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் அனைவரும் தேர்ச்சி என தெரியவந்துள்ளது. மேலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், ஆகஸ்ட் 17 முதல் 21ஆம் தேதி வரை பள்ளியிலேயே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது தேர்வு எழுதிய 9 லட்சத்து 39 ஆயிரத்து 829 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மறுகூட்டல் கிடையாது என்பதால், மதிப்பெண் தொடர்பான புகார்களை தலைமை ஆசிரியர்களிடம் தெரிவிக்கலாம் என தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே