கோடிக்கணக்கான மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்துக்கிடையே, 2020 புத்தாண்டு பிறந்துள்ளது.

2019ம் ஆண்டு விடைபெற்று, நள்ளிரவில் 2020 புத்தாண்டு கோலாகலமாய்ப் பிறந்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் நள்ளிரவு சரியாக 12 மணிக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஹேப்பி நியூ இயர் என விண்ணைப் பிளக்கும் கோஷத்துடன் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டல்களில் ஆட்டம் பாட்டம் களைகட்டியது.

இளைஞர்கள் இளம்பெண்கள் ஏராளமானோர் திரண்டிருந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

புதுச்சேரி கடற்கரையில் திரண்டிருந்த உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்று மகிழ்ந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே