ஊரக உள்ளாட்சி தேர்தல் – 2 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம் நிறைவு!

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.

கடந்த 27-ம் தேதி நடைபெற்ற முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், 156 ஒன்றியங்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதில் தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக 76.19சதவீத வாக்குகள் பதிவானதாக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

பிற்பகல் 3 மணி நிலவரப்படி 61.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 மணிக்குள்ளாக வாக்குச்சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து வாக்களிக்க வழி வகை செய்யபட்டுள்ளது.

அத்துடன் வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி 2-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே