மது போதை சோதனைக் கருவியில் புதிய சிப்..!

மது போதையில் வரும் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறுவதைத் தடுக்க போதை சோதனைக் கருவியில் புதிய சிப் பொருத்தப்பட்டுள்ளது.

ஆல்கஹால் பிரெத் அனலைசர் என்ற கருவி மூலம் போதையில் வாகனம் ஓட்டியதை உறுதி செய்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

ஆனால் சில போலீஸார் அவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அபராதம் விதிக்காமல் விட்டுவிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

இந்நிலையில் அந்த போதை சோதனைக் கருவியில் பொருத்தப்படுள்ள இந்த நவீன சிப், வாகன ஓட்டிகள் அந்தக் கருவியில் ஊதும் போது எத்தனைப் பேர் போதையில் இருக்கின்றனர் என்ற எண்ணிக்கையுடன், அன்றைய நாளில் எத்தனைப் பேர் அந்தக் கருவியில் ஊதியுள்ளனர் என்ற எண்ணிக்கையையும் சேமித்து வைக்கும்.

அந்த எண்ணிக்கையை உயர் அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட போலீஸார் தெரிவிக்க வேண்டும்.

இதன் மூலம் வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்தாமல் தப்பவே முடியாது.

மேலும் போலீஸாரும் அவர்களிடன் லஞ்சம் பெற்றுக்கொண்டு விடுவிக்கும் சம்பவங்களும் இனி நடக்காது.

இந்த நவீன சிப்பை சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஏ.அருண் அறிமுகம் செய்து வைத்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே