பாரதிய ஜனதா கட்சிக்கு வருகிற டிசம்பர் மாதம் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என அக்கட்சியின் தற்போதைய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியா டுடேவுக்கு பேட்டியளித்துள்ள அவர், கட்சிகளுக்கு நடைபெற்றுவரும் தேர்தல்கள் இவ்வாண்டு இறுதியில் முடிந்தவுடன் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என கூறியிருக்கிறார்.
புதிய தலைவர் பொறுப்பேற்ற பின்னரும், அதிகாரம் படைத்தவராக தான் தொடர்வேன் என கூறப்படுவதை அமித் ஷா மறுத்தார்.
பின்னாலிருந்து இயக்க பாரதிய ஜனதா ஒன்றும் காங்கிரஸ் கட்சிகள் இல்லை என்றும் அவர் கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியின் செயல் தலைவராக இருந்து வரும் ஜெ.பி.நட்டால் புதிய தேசிய தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று அக்கட்சி வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.