தேனியில் சமையல் மசாலா பொருட்கள் தயாரிக்கும் ஆலையில் 20 மணி நேரத்திற்கும் மேலாக தீ

தேனியில் சமையல் மசாலா பொருட்கள் தயாரிக்கும் ஆலையில் 20 மணி நேரத்திற்கும் மேலாக தீ கொழுந்து விட்டு எரிந்தது.

தேனி-போடி சாலைகளில் உள்ள கோடாங்கிபட்டியில் உள்ள ஈஸ்டர்ன் மசாலா பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் மிளகாய்த் தூள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு மின்கசிவு காரணமாக நேற்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கிராம்பு சோம்பு ஏலக்காய் உள்ளிட்ட மூலப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குளிர்பதன கிடங்கில் தீ பரவியது.

பல மணி நேரம் எரிந்த தீயால் சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

தீயின் வேகம் அதிகரித்ததை தொடர்ந்து திண்டுக்கல், தேனி, மதுரையை சேர்ந்த 14 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, எண்பதற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுதவிர தீயை அணைக்க சில தனியார் தண்ணீர் டேங்கர் லாரிகளும் கொண்டு வரப்பட்டன.

தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. ஒரு கட்டிடம் முழுக்க சேதம் அடைந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே