நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தே திமுக வெற்றி பெற்றது : அன்புமணி ராமதாஸ்

நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து திமுக வெற்றி பெற்றதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட மேல்காரனை பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், மீத்தேன், கச்சத்தீவு, காவிரி மற்றும் இலங்கை தமிழர் பிரச்சனை போன்றவற்றுக்கு திமுகவே காரணம் என்றும் விமர்சித்தார்.

தேர்தல் வந்தவுடனே திமுகவுக்கு வன்னியர்கள் ஞாபகம் வந்து விடும் எனவும், அதனால் தான் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அறிவித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாது எனவும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டார்.

பிரச்சாரத்தின்போது அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் சி வி சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே