புதுச்சேரியில் பாஜக நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் காலமானார்..!!

புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த நியமன எம்எல்ஏ சங்கர்(70) இன்று காலை மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 70.

நேற்று இரவு உறங்கச் சென்ற அவர் இன்று காலை வெகு நேரமாகியும் எழுந்திருக்கவில்லை.

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சங்கரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இரவு உறக்கத்தின் போது மாரடைப்பால் சங்கர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கர் மறைவால் புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 3 இல் இருந்து 2 ஆக குறைந்தது.

பாஜகவைச் சேர்ந்த செல்வகணபதி, சாமிநாதன், சங்கரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து இருந்தார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நியமன எம்எல்ஏ சங்கர் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே