விண்வெளி என்றால் என்ன..??
விண் வெளி என்பது பிரபஞ்சத்தின் பொருட்கள் எல்லாம் நகர்ந்து செல்லக்கூடிய கிட்ட தட்ட ஒரு வெற்றிடம் நகர்ந்து செல்லும் பொருட்களில் நமது பூமியும் அடங்கும்.
இந்த பரந்த விண் வெளியில் நடசத்திரங்களும் கிரகங்களும் பூமியும் மிகமிக சிறிய புள்ளிகளே.
விண்வெளியின் துவக்கம்:
பூமியை சுற்றி உள்ள காற்றினால் வளி மண்டலம் உருவாக்கப்படுகிறது. பூமியில் இருந்து உயரே செல்ல செல்ல காற்றின் அடர்த்தி குறைகிறது.
இந்த வளி மண்டலத்திற்கும் விண்வெளியின் வெளிப்பகுதிக்கும் ஒரு தெளிவான எல்லைக்கோடு என்பது இல்லை.
ஆனால் பொதுவாக பூமியில் இருந்து 60 மைல்கள் (95 கீலோ மீட்டர்) உயரத்தில் இருந்து விண்வெளி தொடங்குவதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
வளி மண்டலத்திற்கு அடுத்து உள்ள விண்வெளி காலியாக இல்லை அங்கே சிறிது காற்று, விண்வெளி அசுத்தங்கம் மெட்ராய்ட்ஸ் (Meteoroids) எனப்படும் விண் வெளிக்கற்கள்,பலதரப்பட்ட கதிர்வீச்சுக்கள் இருந்து கொண்டே இருக்கும்.
ஆயிரகணக்கான விண்கலன்கள் அதாவது செயற்கை கோள்கள் இந்த பகுதிக்கு தான் செலுத்தப்படுகின்றன.
பூமியின் காந்த பகுதி அதாவது பூமியை சுற்றி உள்ள பகுதியில் தான் காந்த சக்தி உணரப்படுகிறது. இந்த சக்தி வளி மண்டலத்தையும் தாண்டி விரவிக்கிடக்கிறது.
இந்த காந்த மண்டலம் மின்னூட்டம் கொண்ட பொருட்களை விண்வெளியில் இருந்து ஈர்த்துக்கொள்கிறது.
அதன் மூலம் ஒரு கதிர் வீச்சு மண்டலம் உருவாகிறது அதற்கு வான் அலன் பெல்ட்(Van Allen belts) என்று பெயர்.
பூமியின் காந்த மண்டலத்தில் மின்னூட்டம் பெற்ற பொருட்களை கட்டுபடுத்தும் விண்வெளி பகுதிக்கு மெக்னடோஸ் பியர்ஸ் (Magnetosphere) இது ஒரு கண்ணீர்த்துளி வடிவத்தில் இருக்கும்.
அதனுடைய நுனி சந்திரனுக்கு எதிர்ப்புறம் அமைந்து இருக்கும். இந்த பகுதிக்கு அப்பால் பூமியின் காந்த மண்டலம் சூரிய சக்திக்கு கட்டு பட்டு போகிறது.
இந்த தூரம் கூட பூமியின் புவீஈர்ப்பு விசைக்கு அப்பாற்பட்ட தூரம் அல்ல பூமியிலிருந்து 1.6 மில்லியன் கிலோமீட்டர் உயரம் வரைக்கும் இந்த புவீ ஈர்ப்பு விசை இருக்கும் அதனால் விண் கலன்கள் பூமியின் சுற்று வட்ட பாதையில் நிலை கொண்டிருக்கும்.
கிரகங்களுக்கு இடையே உள்ள தூரத்தை இன்டர் பிலானிட்டரி ஸ்பேஸ் (Interplanetary space) என்று குறிப்பிடுகிறார்கள்.
சூரியனின் ஈர்ப்பு விசை கிரகங்களின் இயக்கத்தை கட்டுபடுத்துகிறது. அதனால் தான் கிரகங்கள் சூரியனை சுற்றி வருகின்றன.
ஒவ்வொரு கிரகங்களுக்கு இடையே உள்ள தூரமும் சூரியனுக்கும் கிரகங்களுக்கும் இடையே உள்ள தூரம் மிக அதிக அளவு இருக்கும் உதாரணமாக பூமி சூரியனில் இருந்து சுமார் 150 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து சுற்றுகிறது.
வீனஸ் கிரகம் 110 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து சூரியனை சுற்றுகிறது.
இந்த வீனஸ் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே வரும் போது பூமிக்கும் வீனஸ் கிரகத்திற்கும் இடையே உள்ள தூரம் 40 மில்லியன் கிலோமீட்டர் .
இந்த தூரம் பூமிக்கும் சந்திரனுக்கும் உம்ள தூரத்தை போன்று 100 மடங்கு அதிகமானது.
நட்சத்திரங்களுக்கு இடையே உள்ளதூரத்தை இண்டர் ஸ்ட்ல்லார் ஸ்பேஸ் (Interstellar space) என குறிப்பிடுகிறார்கள் ஆனால் விண்வெளி ஆய்வாளர்கள் இந்த தூரத்தை கிலோமீட்டர் தூரத்தில் குறிப்பிடுவது இல்லை அதற்கு பதில் ஒளி ஆண்டுகளாக குறிப்பிடுகிறார்கள். (ஒரு ஓளி ஆண்டு என்பது ஒளி ஒரு ஆண்டில் பயணிக்கும் தூரமே ஒளி ஆண்டு எனப்படுகிறது.)
ஒளி ஒரு வினாடியில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 792 கிலோ மீட்டர் பயணிக்கிறது.
சூரியனுக்கு மிக அருகில் உம்ள நடசத்திரத்தின் பெயர் பிராக்சிமா சென்டவுரி (Proxima Centauri) இது சூரியனில் இருந்து 4.2 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது அதாவது 9.46 டிரில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
நட்சத்திரங்களுக்கு இடையே பல தரப்பட்ட வாயுக்கள் மெல்லிய மேகங்கள் தப்பிசென்ற விண் கற்கள் மிக அதிகமான குளிர் தன்மையுடைய தூசுக்கள் முதலியவை மிதக்கின்றன.
மேலும் பலப்பொருட்கள் இப்பகுதியில் கண்டறிப்படாமல் உள்ளன.