சென்னை திரும்புவதற்காக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

சென்னைக்கு திரும்புவோருக்காக இன்று முதல் ஜனவரி 19ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான மக்கள், சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்தனர்.

அவர்களுக்காக தமிழகம் முழுவதும் 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

தாம்பரம் சானிடோரியம், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் 13 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு பேருந்துகள் திட்டமிட்டப்படி இயக்கப்பட்டன.

12ம் தேதியும் 13ம் தேதியும் சொந்த ஊர்களுக்கு செல்வோரின் கூட்டம் பேருந்து நிலையங்களில் குழுமி இருந்தது.

இதையடுத்து, பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் எல்லாம் நேற்றோடு நிறைவடைந்துவிட்டது.

கடற்கரைகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படாததால் காணும் பொங்கல் கலையிழந்திருந்தது. 

இந்த நிலையில், சென்னை திரும்புவோருக்காக இன்று முதல் ஜன.19ம் தேதி வரை 3,393 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை தவிர்த்து பிற ஊர்களுக்கு 5,727 சிறப்பு அரசு பேருந்துகள் உட்பட 15,270 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே