சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளையொட்டி குடியரசுத் தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

சர்தார் வல்லபாய் பட்டேலின் 144வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, குஜராத் மாநிலம் கெவடியாவில் உள்ள 182 மீட்டர் உயரமுடைய உலகின் மிகப்பெரிய சிலையான பட்டேல் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இதேபோல், டெல்லியில் உள்ள பட்டேல் நினைவிடத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜல் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே