நாளை காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் ரஜினி காந்த் பேட்டி அளித்த போது, தான் கூறிய கருத்துக்கள் அனைத்தும் மாவட்ட செயலாளர்களுக்கு திருப்தியாக இருந்ததாகவும் ஆனால் தனக்கு ஒரு விஷயத்தில் மட்டும் ஏமாற்றம் என்றும் கூறினார்.

இந்நிலையில், நாளை ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே நாளையும் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படும் என்பதும் அதன் பின்னர் இன்னும் ஒரு வாரத்துக்கு ஊடகங்களுக்கு சரியான தீனி கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாளை ராகவேந்திர மண்டபத்தில் ரஜினி மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி, கட்சி தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நாளை வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி நாளை முடிவை அறிவிக்கிறார்.

சென்னையில் தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ரஜினி நாளை காலை 10 : 30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே