திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல்வர் பழனிசாமி குடும்பத்தினருடன் சாமி தரிசனம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஐந்தரை ஏக்கர் நிலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

அவருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பூரண மரியாதை அளிக்கப்பட்டது.

சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உளுந்தூர்பேட்டை அருகே ஏழுமலையான் கோயில் கட்டப்படும் என்று தெரிவித்தார்.

இதற்காக ஐந்தரை ஏக்கர் நிலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு பதிவு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே