ஜம்மு காஷ்மீர்- லடாக் யூனியன் பிரதேசங்கள் இன்று உதயம்..!

சுதந்திர இந்தியாவுடன் இணைந்த நாள் முதல், 70 ஆண்டுகளாக காஷ்மீர் மாநிலத்தை வைத்து சர்ச்சையும், பரபரப்பு நிகழ்ந்து வந்தது.

இந்த நிலையில், அந்த மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கி கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு பகுதிகளும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு தலைவர்கள், எம்.பி.க்களை அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் ஸ்ரீநகர் வந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, மாநிலங்களை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளான இன்று முதல், காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே