பாரதியாரின் நிறைவேறாத ஆசை நிறைவேறியது..!!

மகாகவி பாரதியாரின் வாழ்ந்த காலத்தில் நிறைவேறாத ஆசை ஒன்றை தமிழக அமைச்சர்கள் நிறைவேற்றி உள்ளனர்.

பாரதியார் எட்டயபுரத்தில் கவிதைகளால் வேள்வி நடத்திய காலத்தில் அவர் புகழ் பரவத் தொடங்கியது.

அப்போது எட்டயபுரத்து மன்னர், பாரதியை அரசவைக்கு நேரில் வந்து கவிதை பாட வேண்டுமென்று அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

பொன்னாடையும், பொற்கிழியும் கொடுத்தனுப்பி ஜதி பல்லக்கில் தூக்கி வந்தால் மட்டுமே அரசவைக்கு வரமுடியும் என்று சொல்லி இருக்கிறார் பாரதி.

ஆனால் கடைசி காலம் வரை அவரது ஆசை நிறைவேறவில்லை.

இந்த நிலையில் பாரதி பிறந்த தினமான இன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் முன்பு பிறந்தநாள் விழா வானவில் பண்பாட்டு மையமும், தமிழக அரசும் இணைந்து அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் பாரதியின் ஆசையான ஜதி பல்லக்கு கொண்டு வரப்பட்டு அதில் பாரதியாரின் சிலை வைக்கப்பட்டிருந்தது.

தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன், பாஜக மூத்த தலைவர், இல கணேசன், சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் ஆகியோர் ஜதி பல்லக்கை தோளில் சுமந்து திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி இல்லம் வரை கொண்டு சென்று அவரது ஆசையை நிறைவேற்றினர்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வாசலில்தான் யானையின் காலில் மிதிபட்டு பாரதியார் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே