வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வரத் தொடங்கி உள்ளதால் வனத்துறையினர் உற்சாகமடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக அதிக அளவில் வருவது வாடிக்கையாக இருந்துவருகிறது.
இதன்படி வெளிநாடுகளிலிருந்து நத்தை கொத்தி, நாரை சாம்பல் உள்ளிட்ட சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன.
கடந்த சில வாரமாக பெய்த மழையால் வேடந்தாங்கல் ஏரிக்கு தண்ணீர் வரத்து தொடங்கி உள்ளது.
இதனால் இந்த ஆண்டு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வரக்கூடும் என்று வனத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.