தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவிற்கு 1,551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,73,176ஆக அதிகரிப்பு .

வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 1,910 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 7,49,662 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,551 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று பாதிக்கப்பட்டவர்களில் 944பேர் ஆண்கள், 613பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 73ஆயிரத்து 176ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 217 பரிசோதனை மையங்கள் உள்ளன.இன்று ஒரே நாளில் 67,271 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 16லட்சத்து 73 ஆயிரத்து 4521ஆக அதிகரித்துள்ளது.

இன்று 1,910பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,49,662ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 11,875 ஆக குறைந்துள்ளது.

இன்று மட்டும் 17பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் தனியார் மருத்துவமனையிலும், 10 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11, 639ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்துள்ளது. பல மாவட்டங்களில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10க்கும் கீழே குறைந்துள்ளது.

சென்னையில் 469 பேரும் கோவை மாவட்டத்தில் 146 பேரும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை.

பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விபரம்:

அரியலூர் – 2, கடலூர் – 35, தர்மபுரி – 12, திண்டுக்கல் – 11, ஈரோடு – 49, கள்ளக்குறிச்சி – 1,காஞ்சிபுரம் – 73, கன்னியாகுமரி – 24,கரூர் – 15, கிருஷ்ணகிரி – 20, மதுரை – 33, நாகை – 26, நாமக்கல் – 38, நீலகிரி – 27, பெரம்பலூர் – 0, புதுக்கோட்டை – 7, ராமநாதபுரம் – 4, ராணிப்பேட்டை – 13,சேலம் – 78, சிவகங்கை – 19,தென்காசி – 3,தஞ்சாவூர் – 32,தேனி – 14,திருப்பத்தூர் – 16,திருவள்ளூர் – 73, திருவண்ணாமலை – 13,திருவாரூர் – 21,தூத்துக்குடி – 14,திருநெல்வேலி – 26,திருப்பூர் – 58,திருச்சி – 28,வேலூர் – 31,விழுப்புரம் – 27

விருதுநகர் – 8 .

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே