பாலியல் குற்றவாளிகளுக்கு கருணை மனு தாக்கல் செய்ய அருகதை இல்லை – ராம்நாத் கோவிந்த்

குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல் புரியும் குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்யவே அருகதை அற்றவர்கள் என்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் கூறி உள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் சிரோஹியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதற்காக, நாடாளுமன்றத்தில் கருணை மனு விதிகள் பற்றிய சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதனிடையே நிர்பயா கொலை வழக்கு தூக்குத் தண்டனை கைதி வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரிக்குமாறு, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

நாட்டை உலுக்கிய டெல்லி நிர்பயா பாலியல் கொலை வழக்கில், திஹார் சிறையில் உள்ள 4 குற்றவாளிகள் தூக்கு நிறைவேற்றப்படுவதை எதிர்நோக்கி உள்ளனர்.

அவர்களில் ஒருவரான வினய் சர்மா அளித்த கருணை மனுவை டெல்லி ஆளுநர் ஏற்கனவே நிராகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே