டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

டெல்லியில் நேற்று ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் இந்திய வீரர்கள் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்தனர். அதிகபட்சமாக ஷிகர் தவான் 41 ரன்கள் எடுத்தார்.

149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்கதேச அணியின் மொகமது நயீம், சவுமியா சர்க்கார் ஆகியோர் விறுவிறுவென ரன்களை சேர்த்தனர்.

ரஹிம் அதிரடியாக விளையாடி 60 ரன்களைக் குவித்தார். 19.3 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

9 ரன்களில் ஆட்டமிழந்த ரோகித் சர்மா 20 ஓவர் போட்டிகளில் 2,452 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

வங்கதேசத்திற்கு எதிராக டி20 போட்டியில், இதுவரை மோதிய 8 ஆட்டங்களிலும் இந்திய அணியே வெற்றி பெற்று இருந்தது.

இந்நிலையில், நேற்றைய வெற்றியின் மூலம் இந்திய அணியின் வெற்றி நடைக்கு வங்கதேச அணி முற்று புள்ளி வைத்தது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே