டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் பரவும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லி கடந்த ஒருவாரமாக காற்று மாசால் திணறி வருகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் இந்த காற்று மாசால் இதுவரை தமிழகம் பாதிக்கப்பட்டதில்லை.
ஆனால் இம்முறை அப்படி இருக்காது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறி இருக்கிறார்.
அவர் தனது முகநூல் பதிவில் டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு கிழக்கு கடற்கரை பகுதி வழியாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் பரவும் என தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையில் ஏற்பட்டுள்ள இடைவெளி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அடுத்த வாரம் காற்று மாசு அதிகரித்து காணப்படும் எனவும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.