ஏழுமலையான் கோயிலில் இன்று புஷ்ப யாகம்

திருப்பதியில் ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் புஷ்ப யாகம் இன்று நடைபெறுகிறது. 

இதனை முன்னிட்டு, பெங்களூரு, ஹைதராபாத் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட ரோஜா, முல்லை, மல்லி, சம்பங்கி, சாமந்தி என 27 ரகமான மலர்களால் உற்சவருக்கு புஷ்ப யாகம் நடத்தப்படும். 

உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி சம்பங்கி மண்டபம் எனப்படும் கல்யாண உற்சவ மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு புஷ்ப யாகம் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு  விசேஷ பூஜை,  கல்யாண உற்சவம்,  ஊஞ்சல் சேவை , ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே