மகாராஷ்டிரா, ஹரியானாவில் நாளை வாக்கு எண்ணிக்கை

மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. அதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகளில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு நேற்று முன்தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

வாக்குப் பதிவுக்கு ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 895 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 505 கண்ட்ரோல் யூனிட் பயன்படுத்தப்பட்டன.

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் 60.83 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

இதேபோன்று 90 தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநிலத்தில் 68.47 சதவீத வாக்குகளும் பதிவாகின.

இந்நிலையில் இரண்டு மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான இறுதிக் கட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க மிக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது.

அதே நேரத்தில் இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் இழந்த ஆட்சியை திரும்ப சோனியாவும், ராகுலும் பிரச்சாரம் செய்தனர்.

கருத்துக்கணிப்பு முடிவுகளில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என்று கூறப்படும் நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே