கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டில் அ.தி.மு.க..!

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக ஆலோசனை நடத்தியது.

இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தொகுதி பங்கீட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

கட்சியின் ஒருங்கிணைபாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள், சி.வி.சண்முகம், மாஃபா.பாண்டியராஜன், தங்கமணி உள்ளிட்டோர் அ.தி.மு.க சார்பில் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டணி கட்சிகளான,

  • பா.ஜ.க. சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன்,
  • தே.மு.தி.க சார்பில் துணைச் செயலாளர் பார்த்தசாரதி, கொள்கைப் பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன் ராஜ்,
  • பா.ம.க சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி,
  • தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கட்சியின் துணைத் தலைவர் ஞானதேசிகன், கோவை தங்கம் ஆகியோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தியதாக பாரதீய ஜனதா மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக உடனான பா.ஜ.க.வின் கூட்டணி இறுதி செய்யப்படவில்லை என்று கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே