சென்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு..!!

புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளுக்கு தடைவிதிக்க தில்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் புதிய நாடாளுமன்றம் கட்டட வளாகம், அதைச் சுற்றி அமைக்கப்படும் அரசு அலுவலகங்கள், பிரதமா் இல்லம் ஆகியவை கொண்ட சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நாடாளுமன்றம் உள்ளடங்கிய சென்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணி தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது, அத்தியாவசியமானது எனக் கூறி கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்க தில்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மேலும் பொதுநல நோக்கத்துடன் மனுதாரர் வழக்க தொடரவில்லை, உள்நோக்கம் உள்ளது எனக் குறிப்பிட்ட நீதிமன்றம் வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே