சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.ஷாஹி நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு, பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பெயரை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கும், அங்குள்ள தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் மாற்றி கொலீஜியம் முன்னர் பரிந்துரை செய்திருந்தது.

இந்த பரிந்துரையை மாற்றியமைக்க முடியாது என கொலீஜியம் திட்டவட்டமாக தெரிவித்ததை அடுத்து, தஹில் ரமாணி ராஜினாமா செய்தார்.

தற்போது சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி உள்ளார்.

இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி கூடிய உச்சநீதிமன்ற கொலீஜியம், பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஏ.பி.சாஹியை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே