சர்வராக பணிபுரியும் பெண் ரோபோக்கள்

ஒடிசா மாநிலத்தில் சர்வராக பணிபுரியும் பெண் ரோபோக்களை காண தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் உணவகத்துக்கு வருகை தருகின்றனர்.

ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், இரண்டு பெண் ரோபோக்கள் சர்வராக பணியாற்றுகின்றன.

சாம்ப்பா, சாம்ப்மிலி என பெயரிடப்பட்டுள்ள இந்த இரண்டு பெண் ரோபோக்கள் ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவுகளை பரிமாறி மகிழ்வித்து வருகிறது.

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரோபோக்களை பார்ப்பதற்காகவே தினமும் அதிகமான வாடிக்கையாளர்கள் இந்த உணவு விடுதிக்கு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே