நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் மேலும் ஒரு மாணவியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மருத்துவ கல்லூரியில் பயின்ற உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன், சென்னை SRM மருத்துவக் கல்லூரியில் படித்த ராகுல், அவரது தந்தை உள்ளிட்ட எட்டு பேர் ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே காஞ்சிபுரம் சவிதா மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து வழக்கறிஞரின் மகளான அந்த மாணவி மற்றும் மாணவியின் தாயை சிபிசிஐடி போலீசார் கைது செய்து தேனி சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.
அப்போது மாணவி சத்தமிட்டு அழுததால் சிபிசிஐடி அலுவலகம் பூட்டப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.