மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு பதிலடி

கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளை விட வாக்களிக்கக் கூடிய மக்களே எஜமானர்கள் என்று அதிமுகவிற்கு ஆதரவு இல்லை என தெரிவித்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஜான் பாண்டியன் ஆகியோரின் கருத்திற்கு அமைச்சர் செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்.

நாங்குநேரி பகுதிக்கு உட்பட்ட கொங்காந்தன் பாறையில், அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவு கேட்டு திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஊழல் எனக் கூறி எங்களை கைகாட்டும் ஸ்டாலின் இடமே பல ஊழல்கள் உள்ளன என விமர்சித்தார்.

60 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சீன அதிபர் இந்திய பிரதமர் சந்திப்பு, வரலாற்று சிறப்பு மிக்கது என்றும் இது தமிழகத்திற்கு மிகப்பெரிய பெருமையை தேடித் தந்துள்ளதாகவும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே