உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் பொறியியல் கல்லூரி மாணவி தங்கம் வென்றார்

மலேசியாவில் நடைபெற்ற உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் உள்ள தாளவாடியை சேர்ந்த கீர்த்தனா தனியார் கல்லூரியில் நான்காம் ஆண்டு பொறியியல் படித்து வருகிறார்.

கன்னட மொழியில் முதல் பாடமாக கொண்டு படித்து வந்த இவருக்கு, கல்லூரியில் சேர்ந்த பிறகு சிலம்பம் மீது ஆர்வம் வந்துள்ளது.

பயிற்சியாளர் சுதாகரன் இடம் முறையாக சிலம்பம் கற்று மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றார்.

கடந்த 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை மலேசியாவில் நடைபெற்ற உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற கீர்த்தனா, இரட்டை வாள்வீச்சு, குழு கம்பு வீச்சு ஆகிய போட்டிகளில் தங்கமும், தொடுமுனை போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.

பதக்கங்களை வென்று சொந்த ஊருக்கு திரும்பிய கீர்த்தனாவுக்கு தாளவாடி மக்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே