நோபல் பரிசுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யப்படுவது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
ஒரு ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு உரியவர்களை தேர்வு செய்யும் நடைமுறை அதற்கு முந்தைய ஆண்டில் செப்டம்பர் மாதத்திலேயே தொடங்கிவிடும்.
உலகெங்கும் இருக்கும் சுமார் 1000 விஞ்ஞானிகள், தலைவர்கள் உள்ளிட்டோருக்கு நோபல் பரிசுக்கான பரிந்துரை படிவங்கள் அனுப்பி வைக்கப்படும்.
இந்த படிவங்கள் அனைத்தும் மறு ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்குள் நோபல் தேர்வுக் குழுவுக்கு வந்து சேரவேண்டும்.
- பிப்ரவரியில் பரிந்துரை படிவங்களின் பரிசீலனை நடைபெறும்.
- அடுத்ததாக மார்ச் முதல் மே வரையிலான காலகட்டத்தில் நோபல் பரிசுக்குரியவரை தேர்வு செய்வது குறித்து நிபுணர்களோடு தேர்வு குழுவினர் ஆலோசனை நடத்துவார்கள்.
- ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் பரிசுக்கானவர் குறித்து தேர்வு குழு தன்னுடைய பரிந்துரை பட்டியலை தயார் செய்யும்.
- செப்டம்பர் மாதத்தில் பரிந்துரை குறித்த பட்டியல் நோபல் அகாடமி இடம் சமர்ப்பிக்கப்படும்.
- அக்டோபர் மாதத்தில் குறிப்பிட்ட நாட்களில் ஒவ்வொரு துறைக்கும் பரிசுக்குறியவர்கள் தேர்வு குழுவினரின் பெரும்பான்மை வாக்கு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள்.
- டிசம்பர் மாதம் பத்தாம் தேதி இவர்களுக்கான பரிசுகள் வழங்கப்படும்.