வீட்டுக்குள்ளே இருக்க கஷ்டமா இருக்கு.. வெளியே போய் விளையாட ஆசையா இருக்கு.. மனம்திறந்த அஸ்வின்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பின்-பவுலராக இருப்பவர், ரவிச்சந்திர அஸ்வின். பல கடினமான சூழலில் தனது அற்புத பந்துவீச்சில் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார்.

தற்பொழுது அவர் வீட்டிலே முடங்கி இருந்த நிலையில், கடந்த 4ஆம் தேதி சத்குருவுடன் ஆன்லைன் இன்டர்வியூ ஒன்றில் ஒன்றில் தொகுப்பாளராக செயல்பட்டார் அப்பொழுது அவரிடம் கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டார் அஸ்வின்.

மேலும் நிகழ்ச்சியின்போது அஸ்வின், வெளியில் சென்று போட்டிகள் மற்றும் பயிற்சிகளில் ஈடுபடாமல் வீட்டில் உள்ளது மிகவும் கடினமாக இருப்பதாகவும், போட்டிகளில் பங்கேற்று விளையாட மிகுந்த ஆவலுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே