சென்னையில் நடந்து வரும் 14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான ஏலத்தில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் கேதார் ஜாதவை விலைக்கு வாங்க எந்த அணி நிர்வாகமும் முன்வரவில்லை.

அதேசமயம், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலியை ரூ.7 கோடிக்கு விலைக்கு வாங்கியது சிஎஸ்கே அணி நிர்வாகம்.

கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த கேதார் ஜாதவ் மிகவும் மோசமாகச் செயல்பட்டார்.

சிஎஸ்கே அணி பல போட்டிகளில் வெல்ல வேண்டிய நிலையில் இருந்தபோது மந்தமான ஆட்டத்தால் தோற்பதற்கும் காரணமாகினார்.

இதனால் ரசிகர்கள் மத்தியிலும் கேதார் ஜாதவ் மீது வெறுப்பாகி, அவரை அணியிலிருந்து நீக்குமாறு சமூக ஊடகங்களில் வலியுறுத்தினர். 

இதனால், சிஎஸ்கே அணியிலிருந்து ஜாதவ் விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும் கேதார் ஜாதவுக்கு ரூ.2 கோடி அடிப்படை விலையிலிருந்து குறையவில்லை.

சென்னையில் நடந்து வரும் 14-ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் இன்று ரூ.2 கோடி அடிப்படை விலையில் கேதார் ஜாதவ் அறிவிக்கப்பட்டார்.

ஆனால், எந்த அணியினரும் கேதார் ஜாதவை விலைக்கு வாங்க முன்வரவில்லை.

சிஎஸ்கே அணிக்கு தற்போது பந்துவீச்சு ஆல்ரவுண்டர் தேவை என்பதால், ஏலத்தில் மேக்ஸ்வெலுக்கு அதிகமான ஆர்வம் காட்டியது.

ஆனால், ரூ.14.25 கோடிக்கு மேக்ஸ்வெல்லை ஆர்சிபி அணி தட்டிச் சென்றது.

ஆனால் மனம் தளராத சிஎஸ்கே அணி ரூ7 கோடிக்கு மொயின் அலியை விலைக்கு வாங்கியது. ஆர்சிபி அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட மொயின் அலிக்கு ரூ.2 கோடி அடிப்படை விலை வைக்கப்பட்டது.

ஏலத்தில் மொயின்அலி பெயர் அறிவிக்கப்பட்டதும் ரூ.2.20கோடிக்கு சிஎஸ்கேஅணி கேட்டது. ரூ.240 கோடிக்கு பஞ்சாப் அணி கேட்க, ரூ.2.60 கோடியாக சிஎஸ்கே அணி உயர்த்தியது.

மொயின் அலிக்கு ரூ.3 கோடி கொடுக்க சிஎஸ்கே அணி தயாரானது, ஆனால், பஞ்சாப் அணி ரூ.4 கோடி விலை வைத்தது.

ஆனால், விடாமல் துரத்திய சிஎஸ்கே அணி ரூ.4.6 கோடிக்கு மொயின்அலியைக் கேட்டது. பஞ்சாப் அணி ரூ.4.80 கோடியாகஅதிகரித்தது. சிஎஸ்கேஅணி ரூ.5 கோடிக்கு மொயின் அலியை விலை பேசியது.

பஞ்சாப் அணிககும், சிஎஸ்கே அணிக்கும் மொயின் அலியை ஏலம் எடுப்பதில் கடும் போட்டி நிலவியது. உச்சகட்டமாக ரூ.6 கோடிக்கு மொயின் அலி பேசப்பட்டார்.

ஆனால், மீண்டும் பஞ்சாப் அணி முந்துவதற்குள் ரூ.7 கோடி மொயின் அலிக்கு தருவதாக சிஎஸ்கே அணி கூறியது. இதையடுத்து, ரூ.7 கோடிக்கு மொயின் அலி சிஎஸ்கே அணிக்கு விற்கப்பட்டார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே