JUST NOW : குடியுரிமை திருத்த சட்ட விவகாரம் தொடர்பாக கேரளாவில் மாணவர்கள் இடையே மோதல்(வீடியோ இணைப்பு)

குடியுரிமை திருத்த சட்ட விவகாரம் தொடர்பாக கேரளாவில் கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநில கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்மாநிலங்களிலும் சில இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், எதிர்கட்சி தலைவர்களுடன் சேர்ந்து, ஒரே மேடையில் தர்ணா போராட்டம் நடத்தினார்.

இருப்பினும் இந்த சட்டத்தினால் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்து வருகிறது.

இந்த நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள வர்மா கல்லூரியில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அகில் பாரதிய வித்யாத்ய பர்ஷித் அமைப்பின் செயலாளர் விளக்கமளித்து வந்தார்.

An activist was brutally attacked by communist goons of Kerala in Varma college

அப்போது ஆத்திரமடைந்த அக்கல்லூரியின் மாணவர்கள், அந்த நபரை சரமாரியமாக அடிக்கத் தொடங்கினர்.

இதனால், கல்லூரி வளாகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பின்னர், அங்கிருந்த சிலர் மாணவர்களை விலக்கி விட்டு சமாதானம் செய்தனர்.

கேரளாவில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, மாணவர்கள் போராட்டங்களை அமைதி வழியாகவே எடுத்துச் செல்ல வேண்டும், இதுபோன்று வன்முறைகளை கையில் எடுக்கக் கூடாது என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே