இளம்பெண்களின் மௌன அலறல் ஓயவில்லை – கமல்ஹாசன்

இளம்பெண்களின் மௌன அலறல் ஓயவில்லை என்று பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து மநீம தலைவர் கமல் வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு திடீர் திருப்பமாக வழக்கில் தொடர்புடையதாக வழக்கில் கைதான 5 பேர்களின் கூட்டாளிகளான பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த மேலும் 3 பேரை செவ்வாயன்று விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி வடுகபாளையம் கிருஷ்ணசாமி செட்டியார் மகன் அருளானந்தம் (34), இவர் அதிமுக பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளராக உள்ளார். 

பொள்ளாச்சி வடுகபாளையம் பழனிசாமி என்பவர் பாபு என்கிற பைக் பாபு (27), பொள்ளாச்சி ஆட்சி பட்டி, சங்கம்பாளையம், கற்பக விநாயகர் நகர், தங்கராஜ் மகன் ஹேரேன்பால் (29), இந்த மூன்று பேரையும் நள்ளிரவு விசாரணையின் முடிவில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்நிலையில் இளம்பெண்களின் மௌன அலறல் ஓயவில்லை என்று பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து மநீம தலைவர் கமல் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் மௌன அலறல் ஓயவில்லை. ஆளும்கட்சியைச் சேர்ந்தவர் கைதாகியிருக்கிறார்.

இது பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்குப் பாதையாக இருக்கவேண்டும்.

வேறெதற்காகவோ பயன்பட்டுவிடக் கூடாது.’ என்று பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே