BREAKING TODAY : நிர்பயா குற்றவாளி சீராய்வு மனு தள்ளுபடி : தூக்கு உறுதி

நிர்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளில் ஒருவரான அக்சய் குமார் சிங் தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அக்சய் குமார் சிங் என்ற அந்த குற்றவாளி தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை, நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண், எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமா்வு விசாரித்து வந்தனர்.

மரண தண்டனையால் குற்றவாளிகளை அழித்துவிட முடியுமே தவிர குற்றங்களை அழிக்க முடியாது என்றும்; குற்றவாளிகள் திருந்த வாய்ப்பு வழங்க வேண்டும் என்று மனுவில் அக்ஷய் குமார் சிங் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு அக்சய் குமார் சிங் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

குற்றவாளிகள் அனைவரின் கருணை மனுக்கள் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதனால் நிர்பயா குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான பணிகளை திகார் சிறை நிர்வாகம் ஏற்கனவே தீவிரமாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே