அமேசான் நிறுவனம் ஆன்லைனில் உணவு சேவை அளிக்கும் வர்த்தகத்தை வரும் தீபாவளி முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிகப்பெரிய ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசான் உணவு விநியோக வர்த்தகத்தில் இறங்கினால் ஏற்கனவே உணவு சேவை வழங்கும் நிறுவனங்களான SWIGGY, ZOMATO போன்றவற்றை பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அமேசான் நிறுவனம் ஆன்லைனில் உணவு சேவையில் களமிறங்கினால் அதிக தள்ளுபடி, கேஷ்பேக் சலுகை, உணவக உரிமையாளர்களிடம் இருந்து குறைந்த கமிஷனை வசூலிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் என்பதால் மற்ற உணவு சேவை நிறுவனங்களின் வர்த்தகத்தை பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அமேசான் ஆன்லைன் உணவு விநியோகத்தை முதலில் பெங்களூரில் தொடங்கி, பின்னர் மற்ற நகரங்களில் விரிவுபடுத்த உள்ளதாக தெரிகிறது.