மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது குறித்து சீமான் பேசியது தவறு என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட போது மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டதோ அதே வெறுப்பு உணர்வை மீண்டும் உருவாக்க கூடிய வகையில் யாரும் கருத்து கூறக்கூடாது என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி தமிழக வருகையின் போது நடந்த வரவேற்பு நிகழ்வில் தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து கேட்ட போது, வழக்கமான நடைமுறையை பின்பற்றியதாகவும், ஒருமுறை பங்கேற்ற நிர்வாகிகளுக்கு மறுமுறை வாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லை என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கினார்.
இதனை மூத்த நிர்வாகிகள் அறிந்து இருப்பார்கள் என்றும் விளக்கிய பொன்.ராதாகிருஷ்ணன், இந்த விஷயத்தை திமுக ஊதிப் பெரிதுப்படுத்த நினைப்பதாக குற்றம்சாட்டினார்.