தம்பதியிடம் வாக்குவாதம் செய்த 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வாகன தணிக்கையின் போது தம்பதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பாக சர்ச்சையால் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிதம்பரத்தில் குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியிடம் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அத்துமீறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

அதில் பைக்கில் இருவர் தான் வரவேண்டும் எனவும், குழந்தைக்கு எத்தனை வயது ஆகிறது எனவும் ஒரிஜினல் சான்றிதழ்களை தருமாறும் போலீசார் கேட்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தம்பதிகளிடம் ஒழுங்கீனமாக நடந்ததாக உதவி ஆய்வாளர் வேல்முருகன், காவலர் சார்லஸ் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே