ஊரடங்கு நீட்டிப்பு பொருளாதார வளர்ச்சிக்கு நல்லது அல்ல – ரகுராம்ராஜன்

ஊரடங்கு நீட்டிப்பு பொருளாதார வளர்ச்சிக்கு நல்லது அல்ல என்று ராகுல்காந்தி உடனான நேர்காணலில் ரகுராம்ராஜன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனிடம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேர்காணல் நடத்தினார்.

அப்போது பேசிய ரகுராம் ராஜன், இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு உதவ 65 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்றும் ஊரடங்கை நீட்டிப்பது என்பது மிகவும் எளிதானது தான், ஆனால் அது பொருளாதாரத்திற்கு நிலையானதாக இருக்காது என்றும் கூறியுள்ளார்.

நீண்ட நாட்களுக்கு மக்களுக்கு உணவளிக்கும் திறன் இந்தியாவுக்கு இல்லாததால், நாம் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றும்; கட்டுப்பாடுகளை தளர்த்தும் போது, யாருக்காவது பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அவர்களை தனிமைப்படுத்த கவனமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே