சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் வெளியூர் செல்லும் பயணிகள் அவதி அடைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆயுதபூஜை தொடர்விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சென்னையிலிருந்து 6,145 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சென்னை கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், சரியான நேரத்தில் பேருந்துகள் இயக்கப்பட வில்லை என வெளியூர் செல்லும் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெளியே பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் பேருந்துகள் உள்ளே வருவதில் தாமதம் ஏற்படுகிறது.
இதனால் நெரிசல் ஏற்பட்டு காலதாமதமாக பேருந்துகள் இயக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.