“ஏழை, எளிய மக்களுக்காக உயிரைக் கொடுத்து பாடுபடுவேன்” – ரூபி மனோகரன்

ஏழை எளிய மக்களுக்காக உயிரைக் கொடுத்தும் பாடுபடுவேன் என நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களக்காடு பகுதியில், ரூபி மனோகரன் வாக்கு சேர்க்களிப்பில் ஈடுபட்டார்.

திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்த அவர், தான் சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் என்றும், காமராஜர் மீது பற்றுடையவர் என்றும் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுவதாகவும், ஏழை, எளிய மக்களுக்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே