தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

அதில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர், மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் காணொளிக் காட்சி மூலம், ஆலோசனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், சீனாவில் உள்ள தமிழக மாணவர்கள் குறித்து முதலமைச்சர் மூலம் தூதரக அதிகாரிகளுடன் பேசப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே